ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக தௌபீக் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘வீட்டுக்கு வீடு மரம்’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் நான்காவது வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வேலைத்திட்டமொன்று தோப்பூர் பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு எம்.எஸ் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *