ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

ரயில் சேவைகள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்று (02) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று தொடக்கம் மாகாணங்களுக்கு இடையில் 30 ரயில்கள் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச ஊழியர்களும் இன்று தொடக்கம் வழமை போல பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஏதிர்வரும் நாட்களில் தேவை ஏற்படின் மேலதிக ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply