சமீபத்திய அரசியலில் இரு பெரும் துரோகங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

சமீபத்திய அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் இரு பெரும் துரோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றிணைந்த மக்கள், அந்த ஆட்சியால் அதிருப்தி அடைந்தனர்.

பின்னர் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை பற்றிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2019 இல் மக்கள் மீண்டும் நம்பிக்கையை இழந்துள்ளதாக ஹரிணி அமரசூரிய கூறினார்.

துரோகங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பல்வேறு வழிகளில் தீர்வுகளைத் தேடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அதே தரப்பினர் தற்போதும் மக்களை மீண்டும் ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் புதிய தோற்றத்துடன் வெளியே வரத் தயாராகி வருகின்றன என்றும் ஹரிணி அமரசூரிய கூறினார்.

எனவே மக்கள் மீண்டும் ஏமாறாமல் தடுப்பதற்கு அனைத்து முற்போக்கு சிந்தனையுடைய அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *