காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதையின் திருத்த வேலைகள் நிறைவடைந்ததை அடுத்து குறித்த பிரதேசங்களுக்கு இடையிலான கடற்பாதை சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடற்பாதையின் திருத்த வேலைகள் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த கடற்பாதையின் திருத்த வேலைகள் தற்போது பூர்தியாகியுள்ள நிலையில்; உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த இரு பிரதேசங்களையும் இணைக்கும் கடற்பரப்பில் பாலம் அமைப்பதற்கான கோரிக்கையும் ஜகாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.