வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் முதலாவது பாடல் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் 60 ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதுடன், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்ற நிலையில், முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply