சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினாரா??

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்தாரா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டார்.

கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவிற்கு அனுமதி வழங்கியிருப்பாரா என்ற சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.

சுகாதாரத் துறையினர் மாகாணங்களுக்கு இடையிலான பயணம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நேரத்தில் அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத்துள்ளமை குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.

இதேவேளை அரசாங்கம் தனது குறுகிய நோக்கத்திற்காக நாட்டை ஆபத்திற்கு கொண்டு செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் எதிர்ப்பை தெரிவிக்கும் என்றும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.

Leave a Reply