கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

நாட்டில் தற்போது வைத்தியசாலைகளில் உயிரிழப்போரை காட்டிலும், அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ராஜரட்ட பல்கலைகழகத்தின் சமூக மருத்துவ பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 3 வார காலப்பகுதியில் மரண வீதம் அதிகரித்துள்ளது.

நாளொன்றுக்கு 60 என்ற அடிப்படையில் கொரோனா மரணங்கள் பதிவாகின்றன.

அவ்வாறெனில் வாரம் ஒன்றுக்கு, 400 க்கும் அதிக கொரோனா மரணங்கள் சம்பவிக்கின்றன.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக தங்கியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது அலட்சியமாக செயற்பட்டால், எதிர்வரும் வாரங்களில் நாளொன்றில் 80 மரணங்கள் வரை அதிகரிக்கும் என பேராசிரியர் வைத்தியர் சுனெத் அகம்பொடி எச்சரித்துள்ளார்.

Leave a Reply