முல்லைத்தீவு – மல்லாவி, பாலிநகர் பகுதியினை சேர்ந்த புகைப்பட கலைஞரான இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
34 வயதுடைய சண்முகரட்ணம் வினோதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில், சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.