மத்திய வங்கியின் அறிக்கை குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று!

2020 மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2020 மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேநேரம், 4 சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இந்த சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றினை நாடாளுமன்றில் இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply