வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்ட 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

மன்னாரில் 67.54 சதவீதமானோர் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவில் 63.70 சதவீதமானோர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

குறித்த பட்டியலில்  யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி  ஆகியன முறையே 3, 4, 5ஆம் இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply