தமிழினத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்காக இன்று தமிழர் தேசம் முழுவதும் மக்கள் உணர்வு எழுச்சியுடன் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு இராணு கெடுபிடிகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
தமிழர் தாயகம் மட்டுமல்லாது புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் சர்வதேச நாடுகளிலும் மக்கள் எழுச்சி கொண்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் இம்முறை 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
மக்கள் தத்தமது வீடுகளுக்கு அண்மையில் உள்ள துயிலுமில்லங்களுக்கு மாலை 4.30 மணியளவில் செல்வதுடன் மாலை 6.05 மணிக்கு ஈகை சுடர் ஏற்றப்படுவதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.