இலங்கையில் நடைபெறவிருந்த திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவுக்கு மாற்றம்!

இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டியை அமெரிக்காவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், தற்போது குறித்த போட்டியை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2021 திருமதி அழகிப் போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15ஆம் திகதி லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply