வெளியான புலிகளின் தலைவர் பிரபாகரன் மகளின் வீடியோ? – தேசிய பாதுகாப்பு குறித்து அச்சம்..? அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

 

தேசிய பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் எனப்படுபவர் குறித்து  நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் இடம்பெறுவதை இந்த நாட்டில் உள்ள எவரும் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர்,

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *