
கொழும்பு, பெப்.21
ஐக்கிய ராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கழிவுகளை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பற்றிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்துறையினர் கழிவு கொள்கலன்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
BASEL உடன்படிக்கையின் பிரகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் கழிவுகளை கொண்டு செல்ல முடியாது எனவும் கொள்கலனை மீண்டும் ஐக்கிய ராச்சியத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் சில கொள்கலன்கள் முதற்கட்டமாக திருப்பி அனுப்பப்பட்டதுடன், எஞ்சிய 45 கொள்கலன்கள் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.