
தற்போது அதிகரித்து வரும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வழிகளிலும் பெற்றோலிய பயன்பாட்டை குறைப்பதே நிலைமையை சமாளிப்பதற்கான சிறந்த வழியாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சந்தை விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், குறைந்த வருமானம் பெறும் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே அத்தியாவசிய பயன்பாட்டிற்கு எரிபொருளை வழங்குவதன் மூலம் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறும், அதிக எரிபொருள் பாவனையாளர்கள் அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் அதிகப்படியான பாவனையை கட்டுப்படுத்தும் முறையொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச எரிபொருள் கொள்வனவுகளை அரசாங்கம் குறைக்க முடியும் எனவும் அதனால் வெளிநாட்டு இருப்புக்களை பாதுகாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்