
கொழும்பு, பெப் 21: கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தை மீள திறக்குமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில் “தற்போது விரிவுரைகள் அனைத்தும் ஆன் லைன் ஊடாக
நடைபெறுகிறது. பரீட்சைகள் இதுவரை நடத்தப்படவில்லை.இதனால் தற்போதைய சூழலில் பட்டப்படிப்பை நிறைவுசெய்ய அதிக காலம் செலவிட வேண்டியேற்பட்டுள்ளது. மாணவர்களின் நன்மை கருதி, தகவல் தொழில்நுட்ப பீடத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பேராசிரியர் சுமேத ஜயநெத்தி கூறுகையில் ‘பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது, பிரயோக பரீட்சைகளை விரைவில் நடத்தப்படும். தொழில்நுட்ப பீடதந்தை விரைவாக திறப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.