
மன்னார், பெப்.21
மன்னார் – பேசாலையிலிருந்து கடற்றொழிலிற்குச் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பேசாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு படகில் மீன்பிடிக்கப் புறப்பட்ட இரு மீனவர்களே கரை திரும்பவில்லை என தற்போது கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு காணமல்போன படகில் இரு மீனவர்களை கடற்படையினரின் இரு படகுகள் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.