
நாட்டில் தற்போதுள்ள எண்ணெய் விலை உயர்வு குறைவை மக்களால் அறிந்து கொள்ள முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரம ரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மக்களுக்கு இன்று நான் முக்கியமாக கூற எண்ணியது எண்ணெயின் விலை குறித்து, அனைத்து இடங்களிலும் கூறுவது எண்ணெயின் விலை அதிகரிக்கும் என்று.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எண்ணெய் விலை அதிகரித்தது, 92 octane விலையை ஏழு ரூபாவால் அதிகரித்தது, தற்போது அதன் விலை ரூ 184 ஆக உள்ளது.
அதே போல முன்னர் 95 octane விலை மூன்று ரூபாவால் அதிகரித்தது, அதன்படி ரூ. 213ம் டீசல் மூன்று ரூபாவால் தற்போது ரூ. 124 ஆக காணப்பட்டது.
எனவே நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் எரிபொருள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்று.
அதற்காகதான் முன்னமே நாங்கள் விலை பட்டியல் ஒன்றை அறிமுகம் செய்தோம்.
எனவே அதன் மூலம் எண்ணெய் விலை உயர்வு குறைவை மக்களால் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் இங்கு அனைத்தும் குழம்பி கிடக்கின்றன.அதாவது நாட்டின் கொள்கை அனைத்தும் பாழாகிபோயுள்ளது.
அரசாங்கம் கூறுவது ஒன்று ஆனால் அச்செயலை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வேறொன்றை கூறுகின்றனர்.
முன்னர் எரிபொருள் மின்சார சபைக்கு பெற்று கொடுத்தது அரசாங்கம், இன்று மின்சார சபையிற்கு தாமே எரிபொருளை பெற்றகொள்ளுமாறு கூறப்படுகிறது என்றார்.