
ருமேனியா, பெப்.22
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவின் ஹொரியா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரமாக நடந்துசென்று கொண்டிருந்த இலங்கையர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ருமேனியாவில் பணியாற்றிவந்த இலங்கையர்கள் இருவரே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள், பிலியந்தலையைச் சேர்ந்த அசேல பண்டார (42) மற்றும் பேருவளையைச் சேர்ந்த கயான் சம்பத் (39) ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.