யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயதில் இடம்பெற்ற மணவாளக்கோலம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மணவாளக் கோல விசேட பூசைகள் இன்று காலை 8:00. மணியளவிலிருந்து ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள், ஓம குண்டம் வளர்த்து ஓம குண்ட  பூசை, 1008. சங்காபிசேகம், கும்ம நீராட்டல்  என்பன இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து பிற்பகல் 5:00 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதியில் உலா வந்தார்.

இன்றைய மணவாளக்கோல சிறப்பு வழிபாடுகளில் வல்லிபுரம், துன்னாலை, கற்கோவளம் உட்பட்ட பகுதிகளிலிருந்து அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *