சிக்கியது 4 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்..!

சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட குஷ் எனும் போதைப்பொருள் ஒரு தொகுதியை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இதனை சுங்க ஊடகப் பேச்சாளரும் அத்திணைக்களத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

சீதுவை பகுதியில் உள்ள கொரியர் சேவை நிறுவனம் ஒன்றுக்கு, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து பிலியந்தலை, இங்கிரிய, மினுவாங்கொடை, மாத்தறை மற்றும் பொல்கஸ்ஓவிட்ட பகுதிகளில் உள்ள 5 போலி முகவரிகளுக்கு அனுப்பட்டிருந்த 5 பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப் பொருள் சிக்கியுள்ளது.

மேலும் இதன்போது இடத்துக்கு இடம் எடுத்துச் செல்ல முடியுமான வசதிகொண்ட நாற்காலி ஒன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குஷ் கஞ்சா 3900 கிராமும், மற்றொரு கடித உறையில் இருந்த பெருமளவு கஞ்சா விதைகளும் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவி பிரியவின் மேற்பார்வையில், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகங்களான சி.பேரின்பநாயகம், ஈ. ஆனந் ஈஸ்வரன் ஆகியோரின் வழி நடாத்தலில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இந்த போதைப் பொருள் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

The post சிக்கியது 4 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்..! appeared first on Tamil News.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *