தெற்கிற்கு விலை போகாத தலைவர்களே தமிழ் மக்களுக்கு தேவை- சுரேந்திரன் சுட்டிக்காட்டு..!

தமிழ் தேசியத்தை வாயளவில் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை அடமானம் வைத்து அமைச்சுப் பதவியை பெறுவதற்கு சிலர் முயற்சி செய்து வரும் நிலையில் அந்த கும்பலை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசுவாமி  சுரேந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் யாழ் தேர்தல் போட்டியிடும் பல சுயேச்சை குழுக்கள் மற்றும் தனியாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தெற்கு கட்சிகளுடன் இணக்கத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடக்கின்றன.

இவர்களால் தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வினை முன்வைக்க முடியாததோடு தமிழ் தேசியத்தை சிதைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பொறுத்தவரையில் கூட்டணியாக தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்து ஒற்றுமையுடன் ஓர் அணியில் சங்குச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் .

நாம் தமிழ் மக்களுக்கான தேசிய இன பிரச்சனையில் ஆன்றலிலிருந்து இன்று வரை ஒரே நிலைப்பாட்டில் பயணித்து வரும் நிலையில் தெற்குக்கு விலை போக மாட்டோம்.

சில விசமிகள் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்டயை பொறுக்க முடியாத நிலையில் பல்வேறு கதைகளை கூறி வருகிறார்கள். 

இவ்வாறு சங்கு சின்னத்தை பெற்றமை தவறு எனக் கூறுபவர்கள் தெற்கு அரசியலை ஆதரிப்பவர்களாகவும் அல்லது வேறு அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

சங்குச் சின்னம் தமிழ் மக்களுக்கான சின்னம் அதனை பெறுவதற்கு தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கிய நிலையில் அதனை நாம் பெற்றோம்.

ஆகவே, தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு தெற்கிலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களுக்காக விலை போகாத தலைவர்களை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *