ஓகஸ்ட் 1ம் திகதி முதல் மாற்றம்-எவரும் பயணிக்கலாம்!

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பிரிவுகளாகப் பிரிக்காமல் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்தார்.

அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து எவரும் பயணிக்க முடியும் என அனுமதியளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று முதல் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், ஓகஸ்ட் 01 முதல் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் தொடருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திலம் அமுனுகம தெரிவித்தார்.

Leave a Reply