குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய வகை நோய்

கொவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான 34 குழந்தைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 21 குழந்தைகள் கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய்க்கு உள்ளானதாக சந்தேகிக்கும் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 2 முதல் 6 வாரத்திற்குள் இந்த நோய் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply