டெல்ரா தொற்றை பரவச் செய்ய சூழ்ச்சியா? அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவிப்பு!

நாடு முழுவதிலும் தற்போது கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்ரா தொற்றைப் பரவச் செய்கின்ற சூழ்ச்சி இடம்பெறுகின்றதா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவிக்கின்றார்.

ஊடகங்களுக்கு நேற்று (16) வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

டெல்ரா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலரும் நாட்டின் சில பிரதேசங்களில் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் இத்தொற்றை மேலும் பரவலடையச் செய்ய சிலர் முயற்சிப்பதாகவே தாம் உணர்வதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

Leave a Reply