காரைதீவு பிரதான வீதியில் விபத்து ; இருவர் படுகாயம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் காரைதீவு கமநல சேவைகள் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

Advertisement

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply