ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.