300 கிலோகிராம் கடல் அட்டைகளுடன் கைதான எழுவருக்கு நேர்ந்த கதி..!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோகிராம் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 24 படகுகளையும் தமிழக வனத்துறை திணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

இராமேஸ்வரத்திலிருந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு கடத்தப்பட்ட கடல் அட்டைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பல தடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம் வேதலை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படவுள்ளதாக கடந்த செவ்வாய்கிழமை மண்டபம் வனத்துறை திணைக்களத்திற்கு கிடைத்த தகவல்களுக்கமைய அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் இதன்போது, வேதலை கடற்கரையை நோக்கி உள்ளுர் படகு ஒன்றில் பிரவேசித்தவர்கள் வனத்துறை திணைக்கள அதிகாரிகளை அவதானித்ததுடன் பின்னர் மீண்டும் கடலை நோக்கி படகை செலுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த படகை துரத்திச் சென்ற அதிகாரிகள் ஹரே தீவிற்கு அருகில் வைத்து அதில் பயணித்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து தொடர்ச்சியாக மண்டபம் வனத்துறை திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply