மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில்  நேற்று மாத்திரம் மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

குறிப்பாக நேற்று ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 962 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 11 ஆயிரத்து 540 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்த 57 ஆயிரத்து 368 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 14 ஆயிரத்து 464 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்றைய தினம் 960 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 46 ஆயிரத்து 753 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply