அத்தியாவசிய உணவு பொருள்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடென பஷில் தெரிவிப்பு!

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்களின் விலையினை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இதற்கு அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நிதியமைச்சருக்கும், உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம் இன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்துதெரிவிக்கும்போது நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது,

மூன்று வேளையும் உணவு பெற்றுக் கொள்ள வசதியில்லாத மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் ஆட்சியதிகாரத்தை கையளித்துள்ளார்கள்.

ஆகவே அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply