சிறுமியின் மரணம்- குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் போராட்டம்

<!–

சிறுமியின் மரணம்- குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் போராட்டம் – Athavan News

மலையக சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹற்றனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் எனவும் தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

மேலும் வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply