மட்டக்களப்பில் பிரபல போதை வியாபாரி கைது

மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு காரில் வியாபாரத்துக்காக 13 இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப் பொருளை கடத்திச் சென்ற பிரபல போதைப் பொருள் வியாபாரி டிலக்ஷன் உட்பட 3 பேரை கும்புறுமூலை சந்தியில் வைத்து நேற்று (18) இரவு இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு கும்புறுமூலைச் சந்தியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனையை நோக்கி பிரயாணித்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.

இதன் போது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டதுடன் பிரபல போதைப் பொருள் வியாபாரியான டிலக்ஷன் உட்பட 3 பேரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply