‘டெல்டா’வைரஸ் தொற்று; நாடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும்!

டெல்டா வகை நாட்டில் முதன்மை கொரோனா வைரஸ் தொற்றாக உருவெடுக்கின்றது. இதனால் நாடு முன்னர் எதிர்கொண்டதை விடவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் பல பகுதிகளிலும் ‘டெல்டா’ கொரோனா மாறுபாடு பதிவாகி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமற்றது.

தற்போதைய நிலையில், தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ள பல நாடுகளும் ‘டெல்டா’ வைரஸ் பரவலைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

நாட்டின் தற்போதைய நிலை புறக்கணிக்கக்கூடிய சூழ்நிலை அல்ல. மிகவும் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply