சீனாவில் குரங்கு வைரஸ் தாக்கி ஒருவர் மரணம்!

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த மே 27 இல் உயிரிழந்தார்.

இவரது எச்சில், இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக உயிரிழந்துள்ளமை சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932 இல் கண்டறியப்பட்டது. இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *