ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளனர்: உட்துறை அலுவலகம்!

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையாகும். முந்தைய தினசரி அதிகபட்சம் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 416பேர் வந்ததே ஆகும்.

‘சட்டவிரோத குடியேற்றத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கலைச் சமாளிக்க கணிசமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக’ உட்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கென்டில் உள்ள டங்கனெஸ் என்ற கடற்கரையில் ஒரு டிங்கி படகில் சுமார் 50பேர் இறங்குவதைக் காண முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த குழுவில் பெண்கள் மற்றும் இளம் குழந்தைகள் இருந்தனர்.

241 புலம்பெயர்ந்தோருடன் எட்டு படகுகள் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவை அடைந்த பிறகு இது வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை, சுமார் 345 படகுகளில் கிட்டத்தட்ட 8,000பேர் பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.

Leave a Reply