கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதி ரியர் அட்மிரல் கே.ஜே.குலரத்ன நேற்று (05) மாலை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்தார்.
திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், கிழக்கு கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடம்பெறும் சட்டவிரோத சுற்றாடல் அழிவை நிறுத்துவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என திரு.குலரத்ன தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்கவும் கலந்துகொண்டார்.
