
பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக குருநாகலில் இருந்து 6 பஸ்களில் ஆட்களை அரசாங்கமே கொண்டு வந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது அநுர குமார திசாநாயக்க பயணித்த வாகனத்தில் தலைக்கவசத்துடன் ஏறிய நபர் அவரது பாதுகாவலர் எனவும் தெரிவித்தார்.