சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைத்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் சுசில்

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லாத நிலையில் பரீட்சையை நடத்துவது குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முழுவதுமாக செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று திங்கள்கிழமை நிலவரப்படி நாடளாவிய ரீதியில் 46,603 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Leave a Reply