வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்கள் அரசுக்கெதிராக போராட்டம்!

வவுனியா ஊழியர்கள் இன்று அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதம மின் பொறியிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

சுமார் அரை மணி நேரமாக குறித்த அலுவலத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பூங்காவீதியூடாக புகையிரதநிலைய வீதுpயை சென்றடைந்து அங்கிருந்து மணிக்கூட்டுகோபுரத்தினை சென்றடைந்தனர்.

முணிக்கூட்டு கோபுரத்தில் இரந்து ஏ9 வீதியை தடை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் பழைய பேரூந்து நிலையத்தினை சென்றடைந்தமையால் ஏ9  வீதியில் சில மணி நேர போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன் எரிவாயு இன்மை, மின்சாரமின்மை, எரிபொருள் இன்மை, மின்சார வழங்கலை விற்பனை செய்யாதே போன்ற வாசகங்கள் எழுத்தி பதாதைகளை தங்கியிருந்ததுடன் கோசங்கைளயும் எழுப்பியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *