யாழில் ஊடகவியலாளர்களின் கமெராவை பறித்து அச்சுறுத்திய கடற்படை!

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியாளர்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கை கடல் படையினர் இன்றைய தினம் செயற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் எழுவை தீவில், மக்களின் காணிகளை, கடல் படையினர் அபகரிக்கும் செயற்பாடு இன்றைய தினம் இடம்பெறவிருந்தது.

காணிகளை அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கண்ணகி அம்மன் இறங்கு துறையிலிருந்து ஊடகவியாளர்கள் படகில் பயணம் செய்வதற்கு ஆயத்தம் ஆகினர்.

இந்த நிலையில் குற்ற புலனாய்வாளர்கள் என தம்மை அறிமுகம் செய்த நபர்கள் சிலர், ஊடகவியலாளர்களிடம் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவலை பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

அதன் பின்னர் எழுவைதீவுக்கு சென்ற ஊடகவியாலாளர்கள் அங்குள்ள பொதுவான விடயங்களை செய்தியாக்குவதற்கு தமது கமெராவில் வீடியோ பதிவு செய்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் திருப்புவதற்கு ஆயத்தமாகிய வேளை, அங்குள்ள கடல் படையினர் ஊடகவியாளாளர்களின் கமெராக்களை வாங்கி பரிசோதனை செய்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

மேலும் எழுவை தீவிலிருந்து யாழ்ப்பணம் வருகை தரும் வரை, புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் ஊடகவியாளர்களை பின் தொடர்ந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *