
மிகவும் நூதனமான முறையில் இன்றைய தினம் வடக்கம்பரை தொல்புரம் பகுதியில் 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் காலை 9.30 மணியளவில் வீட்டின் படலைக்கு அருகே இருந்த அம்மா ஒருவரிடம் மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பின் இருந்தவர் கையில் வாழை இலையும் வைத்து கொண்டு சாத்திரம் சொல்லுற இடத்திற்கு எப்படி செல்வது என்று கேட்பது போல நடித்து அந்த அம்மா என்ன தம்பி என்று அருகில் செல்லும் போது அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.b