
இலங்கையர்கள் அனைவருக்கும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அனைவருக்கும் உரிமையுள்ளது.
அதிகாரிகள் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும், சமூக ஊடகங்களை முடக்குவதை தவிர்க்கவேண்டும்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.