
கொழும்பு, ஏப் 06
நிலவும் தற்போதைய சூழ்நிலையில் அரச சேவை ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, எவ்வித மாற்றமும் இன்றி இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்றும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.