
கொழும்பு, ஏப் 6
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக மக்கள் பெருந்திரளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வகையான பேரணிகள், ஆர்ப்பாட்டங்களின் போது சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.
போராட்டங்களின் போது சிலர் குழந்தைகளையும் தூக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இது பொருத்தமற்ற செயற்பாடாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.