யாழில் நீதிமன்றின் முன்பாகவே திருட்டு: சிக்கினார் பலே கில்லாடி

மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள், 4 துவிச்சக்கர வண்டிகள், 3 அலைபேசிகள் மற்றும் ஒரு வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அண்மையில் மல்லாகம் நீதிமன்ற நடவடிக்கைக்காக வந்திருந்த ஒருவர் தனது 3 அலைபேசிகளை ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளின் பூட்டிவிட்டு நீதிமன்றுக்குள் சென்றுள்ளார்.

வழக்கு முடிவடைந்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை வழங்கியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

அவரிடமிருந்து திருடப்பட்ட ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் 4 துவிச்சக்கர வண்டிகள், 3 அலைபேசிகள், ஒரு வாள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபருக்கு எதிராக கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நீதிமன்றில் நிலுவையுள்ளன.

சந்தேக நபரிடமிருந்து திருட்டுப்பட்ட அலைபேசிகளை வாங்கி உடமையில் வைத்திருந்த மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply