
கல்முனை வடக்கு MOH பிரிவில் 20 – 30 வயதுக்குட்பட்வர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமானது!

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 20 – 30 வயதுக்கட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெற்றுவருகிறது. கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றும் நாளையும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறுகிறது.காலை 8 மணி முதல் மாலை 4.00 மணிவரை தடுப்பூசிகள் ஏற்றும் பணி இடம்பெறும் என சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கணேஸ்வரன் தெரிவித்தார்.
19.09.2021 ஞாயிற்றுக்கிழமை- கல்முனைஇ பாண்டிருப்பு இளைஞர் யுவதிகளுக்கு
கல்முனை ஆதார வைத்தியசாலை வடக்குஇ கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை ஆண்கள் பிரிவு
20.09.2021 திங்கட்கிழமை நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவனை இளைஞர் யுவதிகளுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை வடக்குஇ கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை ஆண்கள் பிரிவு போன்ற இடங்களில் ஊசி செலுத்திக்கொள்ளலாம்.

