2032 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடத்த திட்டம்!

2032 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.

35 ஆவது ஒலிம்பிக் விழாவை நடத்தும் சந்தர்ப்பம் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வழங்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் Thomas Bach அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஒலிம்பிக் விழா நடத்தப்படவுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Advertisement

1956 இல் மெல்போர்ன் நகரிலும் 2000 ஆம் ஆணடு சிட்னி நகரிலும் ஒலிம்பிக் விழா நடத்தப்பட்டது.

தற்போதைய இந்த அறிவிப்பை அடுத்து, பிரிஸ்பேன் மற்றும் குயின்ஸ்லாந்திற்கு மாத்திரமல்ல, முழு நாட்டிற்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அறிவிப்பை தொடர்ந்து பிரிஸ்பேன் மக்கள் வான வேடிக்கைகளை நிகழ்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *