40 நாளாக தொடரும் திருச்சி சிறப்பு முகாம் கைதிகள் போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கைதிகள் தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றுடன் 40 நாளாக தொடரும் போராட்டத்தில் அவர்கள் தெரிவித்தமை வருமாறு _

யார் மனதிலும் எங்கள் மேல் ஒரு இரக்கம் வரவில்லையா, எமது அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், எமது தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் எங்களுக்காகக் குரல் கொடுங்கள்.

அத்தோடு, எங்களையும் எங்கள் குடும்பத்தோடு வாழ விடுங்கள், எங்கள் வழக்குகளை எம் குடும்பத்தோடு இருந்து நடத்த அனுமதியுங்கள் என்றும், நாங்கள் இருந்த இக்காலத்தை தண்டனைக் காலமாக கழியுங்கள், உங்களைப் போல் எங்களையும் வாழ விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள், இந்திய கடவுச் சீட்டை எடுக்க முயற்சித்தமைக்கும், இந்திய நுழைவுச் சீட்டு காலாவதியான காரணத்தாலும், எல்லை கடந்து மீன் பிடிக்க வந்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு 2 வருடங்கள் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *