
மாத்தளை, உன்னஸ்கிரிய பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் சிறுவனொருவன் இன்று (19) முற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியிலுள்ள இளைஞர்கள் சிலர், மரமொன்றை வெட்டுவதற்காக சென்ற நிலையில், இதனை பார்ப்பதற்கு சென்ற போது, மரம் சரிந்து, சிறுவனின் மீது வீழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரத்தின் கீழ் சிக்குண்ட 15 வயதான சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், மாத்தளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையில் 10ம் தரத்தில் இவர் கல்வி பயின்று வருவதாக கூறப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

