ஹெரோயினுடன் கைதான வௌிநாட்டு பிரஜைகளை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 09 பேரையும் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் பாகிஸ்தான் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட 170 கிலோ 866 கிராம் நிறையுடைய ஹெரோயினின் பெறுமதி 1,575 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

கடந்த 10 ஆம் திகதி வௌிநாட்டு பிரஜைகள் 9 பேருடன் குறித்த படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.கைப்பற்றப்பட்ட படகுடன் சந்தேகநபர்கள் நேற்று (18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *